Sunday, October 08, 2006

Captain விக்ரம் பத்ரா - ஒரு வீர சகாப்தம்

இந்த மீள்பதிவு பரம்வீர் சக்ர விருது பெற்ற கேப்டன் விக்ரமுக்கு ஓர் அஞ்சலி !

Image hosted by Photobucket.com
அந்த 1999 ஜூன் மாதம் 19-வது இரவு விக்ரம் பத்ராவுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத தினமாக அமைந்தது! அந்த குளிர் இரவில், கார்கில் போர் தொடங்கி 5 வாரங்கள் ஆன சூழலில், டிராஸ் செக்டாரில் உள்ள சிகரம் 5140 என்ற மலைப்பகுதி, பாகிஸ்தானியரிடமிருந்து விக்ரம் தலைமை தாங்கிய 13 J&K ரை·பில்ஸ் என்ற இந்திய படைப் பிரிவால், வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மலை யுத்த களத்தில் கிடைத்த ஓர் உன்னதமான வெற்றி அது!

இந்த கடினமான யுத்தத்தில் இந்தியத்தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஆச்சரியத்தைத் தரும் செய்தி! இதற்கு முக்கியக் காரணம், பலம்பூர், ஹிமாசலத்தைச் சேர்ந்த விக்ரமின் மனதில் ஆழப் பதிந்திருந்த, இந்திய ராணுவப்பயிற்சி மையத்தில் முன்னிறுத்தப்படும்
"உன் தாய்த் திருநாட்டின் பாதுகாப்பும், மானமும், நலனும் எப்போதும் முதலில் பேணப்பட வேண்டும். அடுத்து, நீ வழி நடத்தும் படையினரின் மரியாதையும், நலனும், சுகமும் பேணப்பட வேண்டும். உன் நலனும், சுயபாதுகாப்பும் எப்போதும் இறுதியாகவே பேணப்பட வேண்டும்!"
என்ற அற்புதமான வாசகமே என்றால் அது மிகையாகாது. இந்த வெற்றியே, புலிக்குன்று (Tiger Hill) வீழ்வதற்கும், இந்தியா கார்கில் போரில் வெல்வதற்கும் முன்னோடியாய் அமைந்தது.

அடுத்து, 24 வயது நிரம்பிய விக்ரமின் கையில், சிகரம் 4875-ஐ பகைவரிடமிருந்து மீட்கும் பணி தரப்பட்டது. அச்சிகரம் 16000 அடி உயரத்தில், ஏறுவதற்கு மிகுந்த சிரமம் தரவல்ல, சற்றே செங்குத்தான அமைப்புடையது. மலையைச் சூழ்ந்திருந்த பனி மூட்டமும், இருட்டும், சற்று உடல் நலன் சரியில்லாத நிலையில் இருந்த விக்ரமுக்கும், அவனுடைய சகாக்களுக்கும் பெரும் சவாலாக அமைந்தன. ஷெர்ஷா என்ற சங்கேதப் பெயர் கொண்ட விக்ரமின் வருகையை அறிந்து கொண்ட பாகிஸ்தானியர் ஆக்ரோஷ எதிர்த் தாக்குதலில் இறங்கினர். விக்ரமும், அனுஜ் நய்யார் என்ற அவரது நம்பிக்கைக்குரிய மற்றொரு இளம் வீரரும், பகைவரின் தாக்குதலை முன்னின்று எதிர்கொண்டு, தங்கள் சக வீரர்களை ஊக்குவித்து, பகைவரின் பதுங்குக் குழிகளை அழித்து பாகிஸ்தானியரை பின் வாங்க வைத்தனர். வெற்றி மிக அருகில் இருந்தது!

எதிரியின் குண்டு வெடிப்பில் கால்களில் காயமுற்ற தனது சகா ஒருவரை மீட்டெடுத்து வர, விக்ரம் பதுங்குக் குழியை விட்டு வெளியேறியபோது, அவருடன் இருந்த சுபேதார், தனக்குக் கட்டளை இடுமாறு மன்றாடியும், விக்ரம், "உனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனக்கு வழி விட்டு விலகி நில்!" என்று கூறிவிட்டு ஓடியபோது, பகைவன் ஒருவனின் துப்பாக்கி ரவை விக்ரமின் மார்பை துளைத்தது.

Image hosted by Photobucket.com
யுத்த களத்தில் வீர மரணம் எய்திய விக்ரம் வெளிப்படுத்திய வீரத்திற்கும், மனத்திண்மைக்கும், மிகச் சிறந்த தலைமைப் பண்புக்கும் அவருக்கு, பின்னாளில் பரம்வீர் சக்ர விருது வழங்கப்பட்டது. அவரது சகா அனுஜ் நய்யாரும் அந்த யுத்தத்தின் முடிவில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மஹாவீர் சக்ர விருது வழங்கப்பட்டது.

இளம் வயதிலேயே பேரும் புகழும் (வீர மரணமும்) அடைந்த விக்ரம், அனுஜ் போன்றவர்கள் தங்கள் பணியை தேசியக் கடமையாகவும், வரமாகவும் எண்ணுவதால் தான், நம்மைப் போன்றோர் பயமின்றி, சுகமாக பதிவெழுத முடிகிறது !!! விக்ரமின் தாயார் ஒரு IAS நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட "கேப்டன் விக்ரம் பத்ரா கார்கில் போரில் கைப்பற்றிய சிகரங்கள் யாவை ?" என்று கேட்கப்பட்டதை நினைவு கூர்ந்து, "தாய்நாட்டை அனைத்திற்கும் முன்னால் வைத்த ஒரு தவப்புதல்வனைப் பெற்றது எங்களுக்குக் கிட்டிய ஓர் அரிய பாக்கியம்!" என்று தன் பெரும் சோகத்திலும் பெருமிதம் கொள்கிறார்!

கார்கில் போரின்போது ராணுவத் தலைவராக இருந்த ஜெனரல் மாலிக், விக்ரமைப் பற்றி "இந்தப் பையன் கார்கில் போரிலிருந்து உயிரோடு மீண்டிருந்தால், சரியாக 15 வருடங்களில் என் பதவியை வகிக்க வேண்டியவன்!" என்று கூறியதை பார்க்கும்போது, விக்ரம் என்ற மாவீரனின், ஒரு தலைவனின் இழப்பின் தாக்கத்தை புரிந்து கொள்ள இயலும்!

Image hosted by Photobucket.com
விக்ரம் பத்ராவின் சிலை பலாம்பூரின் முக்கிய சந்திப்பை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நேர் எதிரே மற்றொரு சிப்பாயின் - மேஜர் சோம்நாத் ஷர்மாவின் -- இந்தியாவின் முதல் பரம்வீர் சக்ர விருதை வென்றவரின் - சிலை காணப்படுகிறது. பலாம்பூரைச் சேர்ந்த அவர், 1947-இல் ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் அனுப்பிய கைக்கூலிகளை சிதற அடித்து முடிவில் வீர மரணம் எய்தியவர். அவ்விடத்தை பங்கிட்டுக் கொள்ள விக்ரமை விட ஓர் உன்னதமான ஆத்மா அவருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை !!!

*168*

13 மறுமொழிகள்:

said...

This is really very interesting... My Salutes to Captain Vikram

said...

I am proud of Captain. Vikaram. Those people know the value of our soldiers, so they kept his statues in their city. We keep all sort of scoundrels statues in our cities.

Jai Hind

Ramya Nageswaran said...

படிக்கும் பொழுது மெய்சிலிர்த்தது. இவர்களைப் போல் நாட்டுக்காக உண்மையாக உழைத்தவர்கள் தான் எத்தனை பேர்? Unsung heros.

said...

பாலா,

நல்ல பதிவு. மேலும் இது போல் எழுதுங்கள்.
தேசிகன்

said...

Do write more...
An intresting idea is to write about the 21 Param Vir Chakra awardees...My tamil is too bad..so I request somebody to do that.

Information on PVC awardees can be found in www.bharat-rakshak.com

ச.சங்கர் said...

அன்புள்ள பாலா,
ரொம்ப நாள் கழித்து வலைப் பதிவுகள் பக்கம் வருகிறேன்.நல்ல பதிவு.
http://ssankar.blogspot.com/2005/06/2.html
படித்துப் பார்த்தாயா?இதையே ஒரு கதையாக எழுதியிருந்தேன்(தமிழாக்கம் மட்டும் என்னுடையது) இந்தக் கதை மரத்தடியிலும் பிரசுரமாகியது.
அன்புடன்...ச.சங்கர்

enRenRum-anbudan.BALA said...

Anonymous friends, Ramya, Desikan and Sankar,

karuththukkaLukku mikka nanRi !

மாதங்கி said...

இளம் வயதிலேயே பேரும் புகழும் (வீர மரணமும்) அடைந்த விக்ரம், அனுஜ் போன்றவர்கள் தங்கள் பணியை தேசியக் கடமையாகவும், வரமாகவும் எண்ணுவதால் தான், நம்மைப் போன்றோர் பயமின்றி, சுகமாக பதிவெழுத முடிகிறது !!!


நூற்றுக்கு நூறு உண்மை.
இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்

enRenRum-anbudan.BALA said...

nanRi, Mathangi !

//இது போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்
//
Will do.

Unknown said...

படித்தவுடன் மெய் சிலிர்க்கிறது. நாடென்ன செய்தது எனக்கு என கேட்டுக்கொண்டு தேசத்தை கேவலப்படுத்திக்கொண்டு திரிகிறோம். இவர்கள் எல்லாம் அப்படி கேட்டிருந்தால் இன்று நாம் என்ன ஆகியிருப்போம்?

ஜெய் ஹிந்த்

enRenRum-anbudan.BALA said...

mikka nanRi, Selvan.

said...

ARMY PEOPLE ARE THE REAL HERO'S OF OUR COUNTRY.THANK YOU VERY MUCH FOR THIS WONDERFUL POST.
JAIHIND.

enRenRum-anbudan.BALA said...

CT, Anony,
Thanks !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails